விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2021 10:04
விழுப்புரம்: கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவிலில், ஆண்டுதோறும் லட்ச தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா சித்திரை 1ம் தேதி (ஏப்., 14ம் தேதி) துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பெண்கள் அகல் தீபம் ஏற்றி வழிபடுவர். விழாவில் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்படும். இதையொட்டி கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து, தண்ணீர் நிரப்பப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், இக்கோவிலில் லட்ச தீப திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவிலில் வழக்கம்போன்று பூஜைகள் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.