பதிவு செய்த நாள்
13
ஏப்
2021
10:04
விழுப்புரம் : இன்பங்களும், துன்பங்களும் கலந்ததே மனிதன் வாழ்வாக அமைந்துள்ளது. இன்பங்கள் நிலைக்கவும், துன்பங்கள் நீக்கவும், துணைபுரிவது சிவ வழிபாடு ஆகும். நல்லவர்களாக வாழ்ந்து வரும் பலர் தங்கள் ஊழ்வினையில் இருந்து, மீளமுடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக, கலியுகக் கடவுளாக விளங்குபவர், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் அமைந்துள்ள, தொரவி கயிலாசநாதர் ஆவார். இது மட்டுமின்றி, மருத்துவர்கள் கைவிட்ட பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டு, பூரண குணம் பெற்றுள்ளனர். அதேபோல, அளவு கடந்த சோதனைகளுக்கு ஆட்பட்டவர்கள் இதுவரை வழிபட்டு தங்கள் துயரங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வருகின்றனர்.
பல்லவர் கால திருக்கோயில் : இத்தகுசக்தி மிக்க தொரவி கயிலாசநாதர் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். ஆனால் இக்கோயில் முழுவதும் சிதிலமடைந்து, திருப்பணி வேண்டி நிற்கின்றது. இந்த நிலையிலும் தன்னை நாடிவரும் அடியவர்கள் குறை தீர்க்கும் வள்ளலாக கயிலாசநாதர் விளங்கி வருகின்றார்.
மகா பெரியவர் : விழுப்புரத்தில் இளம் பருவத்தைக் கழித்த மகா பெரியவர், இத்தலத்து இறைவனை விரும்பி வழிபட்டதை ஊர்ப் பெரியவர்கள் இன்றும் நினைவு கூர்கின்றனர். இத்திருக்கோயிலில் அமைந்துள்ள விநாயகர், முருகப்பெருமான், சிவலிங்கம் உள்ளிட்ட சிலாவடிவங்கள், பல்லவர் மற்றும் சோழர்காலத்தை சார்ந்தது என தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். அடியார்கள் குறைதீர்க்கும் ஆண்டவனால் இயலாதது என்று ஒன்றில்லை. ஆனால், தன் ஆலயத்தை தன் அடியார்களே எழுப்ப வேண்டும் என ஆசைப்படுகின்றார் தொரவி கயிலாசநாதர். இத்தொண்டினை பல்வேறு சோதனைகளுக்கு நடுவே திருப்பணி மேற்கொண்டு வருகின்றார். புதுச்சேரியைச் சார்ந்த அடியார் சிவத்திரு. சரவணன் அவர்கள் இப்பணிக்கு அடியார்களாகிய நாமும் துணை புரிய வேண்டும், சிறு துளி பெரு வெள்ளம். ஒவ்வொருவரின் சிறு தொகை கூட இத்திருப்பணியை விரைந்து முடித்துத் தரும். விளக்குத்திரியை தூண்டி விட்டதற்கே மன்னனாக்கி அருள்வழங்கிய எம்பெருமான், திருப்பணிக்கு உதவும் அடியார்களை கை தூக்கி விடுவான் என்பதில் ஐயமில்லை.
அமைவிடம் : சென்னை - திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி டோல்கேட்டில் இருந்து பிரியும் தஞ்சாவூர் சாலையில் சுமார் 3 கி.மீ தொலைவில் தொரவி அமைந்துள்ளது. அதேபோல் விழுப்புரம் - வழுதாவூர் வழித்தடத்தில் பனையபுரத்தை அடுத்து தொரவி உள்ளது.
தொடர்புக்கு : சிவத்திரு சரவணன் 90252 65394
திருப்பணிக்கு உதவ விரும்புவோர் தொடர்புக்கு :
Name : ENATHI NATHA NAYANAR ARAKKATTALAI
BANK : STATE BANK OF INDIA
SB A/c : 345 792 11546
BRANCH : JIPMER, PUDUCHERRY
IFSC : SBIN 0002238