திண்டுக்கல் அபிராமி அம்மன் சித்திரை திருவிழா : ஏப்.15ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2021 10:04
திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை மறுநாள் (ஏப்.15) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் ஏப்.10 முதல் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தவிர திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஏப்.15 முதல் 27 ம் தேதி வரை திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடத்த திட்டமிட்டிருந்தனர். திடீர் கட்டுப்பாடுகளால் திருவிழா நடத்துவது குறித்து கலெக்டரிடம் அனுமதி கேட்டனர். நேற்று கலெக்டர் விஜயலட்சுமி அரசு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்களின்றி திருவிழா நடத்த அனுமதித்தார்.இதையடுத்து வரும் ஏப்.15 ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. பத்தாம் திருவிழாவான ஏப்.24 ம் தேதி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக தேர் வீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது. சுவாமி வீதியுலாவும் கோயில் உட்பிரகாரத்தில் மட்டுமே நடக்கும். இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மற்ற நேரங்களில் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.