அழகுமலையானுக்கு நேர்த்திக்கடன்: காளையுடன் செல்லும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2021 02:04
காரியாபட்டி: 80 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழாவின் போது அழகுமலை யானுக்கு ராக்காச்சி அம்மன் பங்காளிகள் பாதயாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
காரியாபட்டி கே. ஆலங்குளத்தை சேர்ந்த ராக்காச்சி அம்மன் பங்காளிகள், கடந்த 80 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவின்போது 15 நாட்களுக்கு விரதமிருந்து, ஊர் ஊராகச் சென்று தானியங்கள், காணிக்கைகள் பெற்று கோயில் காளையுடன் பாதயாத்திரையாக சென்று, ஆற்றில் அழகர் இறங்கும் போது, காணிக்கை செலுத்தி, அன்னதானம் வழங்குகின்றனர். கடந்த ஆண்டு கொரோனாவால் சித்திரை திருவிழா நடைபெறவில்லை. நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் தவித்தனர். இந்த ஆண்டு ஆற்றில் அழகர் இறங்குவார் என்ற நம்பிக்கையில் விரதமிருந்து காரியாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் தானியங்கள், காணிக்கைகள் பெற்று காளையுடன் பாதயாத்திரை சென்றனர். பாலமுருகன், சின்னகருப்பசாமி சாமியாடி. ஊர் ஊராக திரி எடுத்து, நெல் விதைப்பு வாங்குவோம்.
தானியங்கள், காணிக்கைகளை பெற்று கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவோம். விவசாயம், விவசாயிகள் செழிக்க வேண்டிக் கொள்வோம். அழகுமலையான் உடுத்தும் பட்டு உடையை பொறுத்து, எந்த மாதிரியான விவசாயம் செழிப்படையும் என்பதை தெரிந்து கொள்வோம். மக்கள் பல்வேறு இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும் என வேண்டி கொள்வோம். அழகுமலையான் எங்களுடன் இருப்பதாக நினைத்து கோயில் காளையை வளர்த்து வருகிறோம், என்றார்.