பதிவு செய்த நாள்
13
மே
2021
04:05
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில், நோயாளிகளுக்கு மதிய உணவு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில், 754 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்தை, பொட்டலங்களாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், உதவியாளர்களுக்கு வழங்கவேண்டுமென, அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் மூலம், கல்வீரம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்கு நோயாளிகள், முன்கள பணியாளர்களுக்கு நேற்று உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. அதோடு, வடவள்ளியில் உள்ள மருதமலை கோவிலுக்கு சொந்தமான சித்த மருத்துவமனையில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா, அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஸ்ரீதேவி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.