அசுபதி: இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கேற்ப எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை மறைத்து வெளியில் மகிழ்ச்சியை காண்பிக்கும் திறனுடைய அசுபதி நக்ஷ்த்திர அன்பர்களே, இந்த மாதம் பல வகையிலும் நற்பலன்கள் நடக்கும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். குடும்பம் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகம் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். பெண்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினர் மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகள் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே - 26 அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் - 04
பரணி: வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளை உள்ளம் கொண்ட பரணி நக்ஷ்த்திர அன்பர்களே, இந்த மாதம் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். குடும்பம் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். தொழில் வியாபாரம் சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகம் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். பெண்கள் திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கலைத்துறையினர் கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை நெய்வேத்யம் செய்து அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே - 27 அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் - 05
கிருத்திகை - 1: யானையை பூனையாக்குவதும், பூனையை யானை ஆக்குவதும் என்பது போல எந்த விஷயத்திலும் சின்னதை பெரியதாகவும், பெரியதை சிறியதாகவும் மாற்றும் கலையை அறிந்த கிருத்திகை நக்ஷ்த்திர அன்பர்களே, இந்த மாதம் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். குடும்பம் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். தொழில் வியாபாரம் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும். உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகம் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம். பெண்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும். கலைத்துறையினர் இந்த மாதம் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கலாம். பேச்சில் கவனமுடன் இருப்பது அவசியம். தெளிவான சிந்தனை உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சில பொறுப்புகளை ஏற்று முடிக்க வேண்டிய சூழலைச் சந்திக்க வேண்டி வரும். இதன் மூலம் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள்.
பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும். சந்திராஷ்டம தினங்கள்: மே - 28 அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் - 06
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »