ராமேஸ்வரம் கோயில் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2021 05:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி, உறவினர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து அரசு மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், இவர்களுக்கு தற்போதைய ஊரடங்கில் உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்களுக்கு மதிய உணவு வழங்கிட இந்து அறநிலையத்துறைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் திருக்கோயிலில் சமைத்த கலவை உணவுகளை தினமும் 300 பொட்டலத்தை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள், உறவினர்களுக்கு கோயில் மேலாளர் சீனிவாசன், கோயில் சித்த மருத்துவர் முருகன், பேஸ்கார் முனியசாமி, சில ஊழியர்கள் நேரில் சென்று வழங்குகின்றனர்.