Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் இடியும் தருவாயில் ... நெல்லை அம்மன் கோயிலில் கொரோனா நீங்க யாகம் நெல்லை அம்மன் கோயிலில் கொரோனா நீங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சூரிய கிரகணம்; கங்கண கிரஹணமாக நிகழ்கிறது
எழுத்தின் அளவு:
இன்று சூரிய கிரகணம்; கங்கண கிரஹணமாக நிகழ்கிறது

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
10:06

சென்னை : இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், கங்கண கிரஹணமாக இன்று நிகழ்கிறது. இதை, அருணாச்சல பிரதேசதத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது; இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.

இது குறித்து பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது:சூரியனை பூமி சுற்றி வரும் பாதையுள்ள தளமும், நிலவு, பூமியை சுற்றி வரும் தளமும் ஒன்றுக்கொன்று, 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு, பூமியை சுற்றி வரும் பாதையில், பூமி-, சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும்.இந்த புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ, முழு நிலவு நாளோ ஏற்பட்டால், முறையே சூரிய, சந்திர கிரஹணம் நிகழும்.சூரியனை விட நிலவு மிகவும் சிறியது. இருப்பினும், அது பூமிக்கு அருகில் இருப்பதால் பெரிதாக தோன்றுகிறது. நிலவுக்கும், பூமிக்கும் உள்ள தொலைவு போல், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு 400 மடங்கு அதிகம்.

நீள்வட்ட பாதை: நிலவின் விட்டத்தை விட, சூரியனின் விட்டமும் 400 மடங்கு அதிகம். எனவே தான் சூரியனும், நிலவும் வானில் ஒரே அளவு கொண்டவை போல தோன்றுகின்றன.இதன் காரணமாகவே, முழு சூரிய கிரஹணத்தின்போது சூரியனை, நிலவு முழுமையாக மறைக்கிறது. நிலவு, பூமியை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றுகிறது.இதனால் பூமிக்கும், நிலவுக்கும் உள்ள தொலைவு, 3 லட்சத்து, 57 ஆயிரத்து, 200 கி.மீ., முதல், 4 லட்சத்து, 7,100 கி.மீ., வரை மாறுபடுகிறது.வெகு தொலைவில் நிலவு இருக்கும்போது, அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிட சற்று சிறிதாக இருக்கும்.அப்போது கிரஹணம் நேர்ந்தால், சூரியனை, நிலவால் முழுமையாக மறைக்க இயலாது. சூரியனின் வெளி விளிம்பு, நெருப்பு வளையம் போல தெரியும். இதை, கங்கண சூரிய கிரஹணம் என்கிறோம். அதுபோன்ற கங்கண சூரிய கிரஹணம், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணமாக இன்று நிகழ்கிறது. கிழக்கு ரஷ்யா, ஆர்ட்டிக் கடல் பகுதி, கிரீன்லாந்து மேற்கு பகுதி, கனடா ஆகிய பகுதிகளில், கங்கண சூரிய கிரஹணத்தை காண முடியும்.

சில நிமிடங்கள்: பகுதி சூரிய கிரஹணமாக வட கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகள், ஆசியாவின் வட பகுதிகளில் பார்க்க முடியும்.இந்தியாவை பொறுத்தவரை, அருணாச்சல பிரதேசத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது; பிற மாநிலங்களில் காண இயலாது.இந்த சூரிய கிரஹணம் இந்திய நேரப்படி மதியம் 1:42க்கு துவங்கி மாலை 6:41 மணிக்கு முடிகிறது. அதிகபட்ச கிரஹணம் 4:11 மணிக்கு நிகழும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar