Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: ஆனி ராசிபலன் மிதுனம் : ஆனி ராசிபலன் மிதுனம் : ஆனி ராசிபலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
ரிஷபம் : ஆனி ராசிபலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரிஷபம் : ஆனி ராசிபலன்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2021
07:06

கிருத்திகை - 2, 3, 4ம் பாதம்:
திறமைகளை மூலதனமாக கொண்டு வாழ்க்கையில் முன்னேறும் க்ருத்திகை நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். நக்ஷத்ராதிபதி சூரியன் சஞ்சாரம் எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும். பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்: ஜூன் 23, 24
அதிர்ஷ்ட தினம்: ஜூலை 08, 09
வணங்க வேண்டிய தெய்வம்: பழனி முருகனை துதித்தால் அரசு அனுகூலம் ஏற்படும்

ரோகினி:
தனது வேகமான நடவடிக்கைகளால் வெற்றி பெறும் ரோகினி நக்ஷத்ர அன்பர்களே நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொள்வதில் வல்லவர் இந்த மாதம் எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு செல்வசேர்க்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 25
அதிர்ஷ்ட தினம்: ஜூலை 10
வணங்க வேண்டிய தெய்வம்: ஸ்ரீரங்கநாதரை பூஜிக்க குடும்பத்தில் மேன்மை ஏற்படும்

மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்:
குணத்தில் சாந்தமாகவும் காரியங்களில் மிடுக்குடனும் இருக்கும் மிருகசிரீஷம் நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் நக்ஷத்ரநாதன் செவ்வாயால் மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். அரசியல்துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 26
அதிர்ஷ்ட தினம்: ஜூலை 11
வணங்க வேண்டிய தெய்வம்: குபேரனை வணங்கினால் கடன்கள் அடையும்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar