பெரியகுளம்: உலக நன்மைக்காக நாமத்வார் பக்தர்கள் ஒரு கோடி, ஹரே ராம நாம ஜபம் செய்து வாட்ஸ்-ஆப்பில் அனுப்பி அனைத்து நன்மைகளும் பெறுவோம், என, ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் நேற்று முன்தினம் அட்சய திரிதியை பூஜையை தொடர்ந்து நேற்று வைகாசி முதல் சனிக்கிழமை பூஜையில் கிருஷ்ணர், ராதை அலங்காரத்தில் காட்சியளித்தனர். தற்போதுள்ள சூழ்நிலையில் மையத்தில் பக்தர்கள் அனுமதி இல்லை. பொறுப்பாளர் பூஜை செய்து வருகிறார்.உலக நன்மைக்காகவும் எல்லோருக்கும் எல்லாவிதமான நன்மைகள் கிடைக்க வேண்டி, பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற மந்திரத்தை தினமும் ஜபம் செய்து 92454 39344 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பவும். மே 24 சுவாதி நட்சத்திரத்தில் ஒரு கோடி எண்ணிக்கையில் கிருஷ்ணர், ராதை பாதத்தில் வைத்து சமர்ப்பணம் செய்யப்படும் என ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.