கோயில் வாசல்களில் திருமணம்; மணமக்கள் பெற்றோர் கவலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2021 05:06
திருவாடானை : கோயில் வாசல்களில் திருமணங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் மணமக்கள்பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்களில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும்.சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க உற்றார் உறவினர்களுடன்விமரிசையாக நடந்த திருமணங்கள், தற்போது கொரோனா ஊரடங்கால் கோயில் கதவுகள் மூடிய நிலையில், வாசலில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் மணமகன், மணமகள் பெற்றோர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து திருவாடானை பொதுமக்கள் கூறியதாவது:கோயில்களில் திருமணம் நடப்பது பண்டைய காலம் முதல் நடந்து வருகிறது. சுவாமியின் அருளால் மணமக்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமையும்என்பது நம்பிக்கை. கோயில் வாசலில் திருமணம் நடைபெறுவதால் மிகவும் கவலையாகஉள்ளது. திருமணம் முடிந்து சுவாமியை நேரில் தரிசனம் செய்ய முடியாமல் மணமக்கள் வீடு திரும்புகின்றனர். ஆகவே வழிபாட்டு தலங்களை திறந்து சமூக இடைவெளியுடன் திருமண விழாக்கள் நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.