தஞ்சை பெரியகோவிலில் இனிப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2012 10:06
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி வராஹி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். தஞ்சை பெரியகோவிலிலுள்ள வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இதன்படி 10வது ஆண்டு திருவிழா நேற்று (19ம் தேதி) துவங்கியது. இதில், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன், செயல் அலுவலர் அரவிந்தன், கண்காணிப்பாளர்கள் அசோகன், குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். நேற்றுக்காலை எட்டு மணி முதல் 10 மணி வரை சிறப்பு வராஹி ஹோமம் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில் ஆறு மணிக்கு வராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.