திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அடுத்த வி.புத்தூர் மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை பூர்த்தி விழா நடந்தது. அரகண்டநல்லூர் அடுத்த வி.புத்தூரில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இது புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக மண்டல பூஜை விழா நடந்து வந்தது. நிறைவாக நேற்று முன்தினம் காலை ஹோமம், அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை அம்மனுக்கு தங்க கவசத்தில் சோடவுபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், வாணவேடிக்கையுடன் வீதிஉலா நடந்தது. கும்பாபிஷேக விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.