ஆடி முளைக்கொட்டு விழா: அன்ன வாகனத்தில் மதுரை மீனாட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2021 09:07
மதுரை : மதுரை மீனாட் சி அம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் இரண்டாம் நாளான நேற்று அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 22ம் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது.