உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் வருகிற ஜூலை 15 வெள்ளி அன்று ஆனித்திருமஞ்சனம் நடக்க உள்ளது. மரகத நடராஜர் சன்னதி முன்பு பஞ்சலோக உற்ஸவ மூர்த்தியான நடராஜர் சமேத சிவகாமி அம்மனுக்கு அன்று அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை அபிஷேக ஆராதனைகள் நடக்க உள்ளது. உட்பிரகார வீதி உலாவிற்கு பின்பு காலை 7 மணிக்கு மேல் மங்களேஸ்வரி அம்மன் சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உத்தரகோசமங்கையில் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் ஆனித் திருமஞ்சனம் விசேஷமாகக் கருதப்படுகிறது.