பதிவு செய்த நாள்
15
ஜூலை
2021
05:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழா, சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயண புண்ணியகாலம் என அழைக்கப்படும், தை மாதம் முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்களில், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில், ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். அதன்படி இன்று ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நடராஜர், சிவகாமி அம்மன், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர், அங்கு சுவாமி மற்றும் அம்மனுக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர் பின்னர், கொரோனா ஊரடங்கால் மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவிலில் ஐந்தாம் பிரகாரத்தில் நடராஜர், சிவகாமி அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, மூன்றாம் பிரகாரத்தில் மகிழ மரத்தின் அருகே நடராஜர், சிவகாமி அம்மனுக்கு இடையே நடக்கும் ஊடலை விளக்கி திருவூடல் விழா நடந்தது.