ராமநாதபுரம்: சஷ்டியை முன்னிட்டு ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியிலுள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷக, பூஜை வழிபாடுகள் நடந்தன.கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஆடி மாத சஷ்டியையொட்டி ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில், குமராய்யா கோயில்களில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பழங்களால் அபிேஷகம் நடந்தது. பக்தர்கள் கந்தசஷ்டி படித்தனர்.குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயில், வெளிப்பட்டனம் பாலசுப்பிரமணியம்சுவாமி, பாலதண்டயுத சுவாமி கோயில், பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயில் அபிேஷகம் பூஜைகள் நடந்தது.* தொண்டி அருகே நம்புதாளை பாலமுருன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் சிறப்பு அபிேஷகம், பூஜை நடந்தது.