பதிவு செய்த நாள்
03
ஆக
2021
03:08
சூலூர்: ஆடி பண்டிகையை ஒட்டி, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
சூலூர் மேற்கு அங்காளம்மன் கோவில், பெரிய மாரியம்மன், காட்டூர் மாகாளியம்மன் கோவில், முத்துக்கவுண்டன்புதூர் மாகாளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில், ஆடி பண்டிகையை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. மேற்கு அங்காளம்மன் கோவிலில் ஆடி 18 ம்தேதி, அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். இதை, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசத்துடன் வழிபட்டனர். காடாம்பாடி சாந்தசிவ காளியம்மன் கோவிலில் நடந்த ஆடி 18 பூஜையில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். புதுமண தம்பதிகள் பலர் அம்மன் ஆலயங்களில் தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். வளையல், மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.