Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாக்.,கில் கோவில் சீரமைப்பு; ... யானைகளால் சேதமடைந்த கோவில் சிலைகள் யானைகளால் சேதமடைந்த கோவில் சிலைகள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கணவன், மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் ஸ்வர்ண கௌரி விரதம்
எழுத்தின் அளவு:
கணவன், மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் ஸ்வர்ண கௌரி விரதம்

பதிவு செய்த நாள்

11 ஆக
2021
02:08

இன்று ஆடி மாதம் சுக்லபட்சம் திரிதியை திதியில் ஸ்வர்ணகௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரத மஹிமை, ஸ்காந்த புராணத்தில், ஸூத பவுராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது.  கணவன் மனைவி ஒற்றுமைக்காகச் செய்யப்படும் விரதங்களில் முதன்மை யானது ஸ்வர்ண கவுரி விரதம்.  உலகம் பிரளயத்தில் மூழ்கியபோது, அந்தப் பிரளயத்தில் இருந்து தோன்றிய ஸ்வர்ண லிங்கத்தைத் தேவர்கள் பூஜித்து வழிபட்ட போது, பொன் போன்ற பிரகாசத்துடன் சிவபெருமானும், உமையன்னையும் தோன்றினர்.  ஸ்வர்ண மயமாகத் தோன்றிய கௌரியை அனைவரும் பூஜித்தனர். கணவன் - மனைவி கருத்தொருமித்து வாழவே இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஸ்வர்ணகௌரி விரதம் பற்றி முருகப் பெருமான் சிவபெருமானிடம் கேட்டபோது, சிவபெருமான் அவருக்கு இந்த விரத மகிமையை உணர்த்தினார்.

முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதி தீரத்தில், விமலம் என்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன்ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் முதல் மனைவியிடம், அரசின் மிக அன்புடன் இருந்தான். ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்ற போது, அங்குள்ள ஒரு குளக்கரையில் தேவைதைகள்,  ஒரு விரதத்தை அனுஷ்டிக்கக் கண்டான். அவர்களிடம் அந்த விரதம் பற்றி கேட்டான்.  அவர்களும், இது ஸ்வர்ண கௌரி விரதம், இதை ஆடி மாதம் சுக்லபட்சம் திரிதியை திதியில் அனுஷ்டிக்க வேணடும். இந்த விரதத்தை கௌரி தேவியைக் குறித்து 15 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். இதை அனுஷ்டிப்பதால் எல்லா நலமும் உண்டாகும் என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும்  முறையையும் சொன்னார்கள். அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்ட அரசன், தானும் அதில் பங்கு கொண்டு  விரதத்தை முறையுடன் அனுஷ்டித்து, 16 முடிச்சுக்கள் அடங்கிய நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்டான்.  அரண்மனைக்குத் திரும்பியதும், தன் ராணிகளிடம், தான் அனுஷ்டித்த விரதத்தைப் பற்றிக் கூறினான். முதல் மனைவி, இதைக் கேட்டு சினம் கொண்டாள். அரசனின் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்தெறிந்தாள். அது, அரண்மனைத் தோட்டத்திலிருந்த ஒரு பட்ட மரத்தின் மீது  விழுந்தது. உடனே, அந்த மரம் துளிர்க்கத் துவங்கி விட்டது. இதைக் கண்டு அதிசயித்த அரசனின் இரண்டாவது மனைவி, உடனே, அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கட்டிக் கொண்ட உடனே, கணவனின் அன்புக்கு உரியவளாகி விட்டாள். முதல் மனைவியோ, அகம்பாவம் கொண்டு தான் செய்த தவறுக்காக, கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டாள். அவள் கானகம் சென்று, தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, தேவியைத் துதித்துக் கொண்டே,  அங்கிருக்கும் முனிவர்களின் ஆசிரமங்களைச்  சுற்றி வந்தாள்.

ஆனால் முக்காலமும் உணர்ந்த மெய்ஞ் ஞானிகளான முனிவர்கள், தேவியை நிந்திப் பவர்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது என்பதை உணர்ந்த காரணத்தினால், அவளை அங்கிருந்து, விரட்டினார்கள். பிறகு அவள் இங்குமங்கும் அலைந்து திரியும் வேளையில், ஒரு தடாகத்தின் அருகில் உள்ள மரத்தடியில் ஒரு வன தேவதை பூஜை செய்வதைக் கண்டு, அவள் அருகில் சென்றாள். ஆனால் வனதேவதை யும் அவளை விரட்டவே, மனம் நொந்து சென்றாள்.  ராணியானவள், கௌரி தேவியைத் துதித்து, மன்னிப்பு வேண்டி வந்த காரணத்தினால், அப்போது, கௌரி தேவி மன மகிழ்ந்து அவள் முன் தோன்றினாள்.  உடனே, ராணியும், ஆனந்தக் கண்ணீர் பெருக, மனம் உருக, தேவியைப் பலவாறு துதித்து, கௌரி பூஜையையும் விரதத்தையும்  அனுஷ்டித்து, கௌரி தேவியிடம் சவுபாக்ய வரம் பெற்று நாடு திரும்பினாள். தேவியின் அருளால், அரசன் அவளை மிகப் பிரியமுடனும், மதிப்புடனும் வரவேற்றான். அவளும், சகல சுகங்களையும் முன் போல் அனுபவித்து சிறப்புற வாழ்ந்தாள். எனவே, இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும். தம்பதிகளிடம் ஒற்றுமை, அன்பு, அதிகரிக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 
temple news
சுப்ரமணிய சுவாமியின் கருவறை 773 இல் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில், அவரது படைத்தலைவன் சாத்தன் கணபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar