விநாயகர் சிலை பிரதிஷ்டை அனுமதி வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத தொடர் போராட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2021 12:09
மயிலாடுதுறை: சீர்காழியில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் தனிநபராக உண்ணாவிரத தொடர் போராட்டம் தொடக்கம்
தமிழகத்தில் வரும் பத்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு கோயில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடவும் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்க வும் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும் ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோவில் எதிரே இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார் . இன்று காலை அக்கட்சியைச் நிர்வாகிகள், திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில செயலாளர் அழகிரிசாமி ஆகியோர் முன்னிலையில் சுவாமிநாதன் தனிநபராக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதனையொட்டி அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.