புதுச்சேரி: மகாளய அமாவாசை தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்தில், முன்னோர்கள் வீடுதேடி வந்து ஆசிர்வதிப்பர் என்பது ஐதீகம். அன்றைய தினத்தில்,நீர் நிலைகளுக்கு சென்று,முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.மகாளய அமாவாசையான நேற்று புதுச்சேரி கடற்கரை, உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் மற்றும் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் அதிகாலை 4:00 மணி முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சங்கராபரணி ஆற்றில் நீராடி, கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.