ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு தடை: காணிக்கை வசூலிக்க உண்டியல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2021 03:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்திற்கு தடை விதித்துள்ள அரசு, வசூலுக்காக உண்டியலை முன்வாசல் மண்டபத்தில் வைத்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பண்டிகை காலங்களில் சுவாமி தரிசனம் செய்ய முடியாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோயில்களின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது,.
இந்நிலையில் கோயில்களில் காணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ள ஹிந்து அறநிலைய துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்தலாம் என சமீபத்தில் அறிவித்தது. தற்போது பூட்டிக்கிடக்கும் கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் காணிக்கையை மட்டும் வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளே இருந்த உண்டியலை வசூலுக்காக கிழக்கு வாசல் முன் மண்டபத்திற்கு மாற்றியுள்ளனர். பூட்டி இருக்கும் கோயில் முன் வந்து வணங்கும் பக்தர்கள் உண்டியலை பார்த்ததும் அங்கிருக்கும் ஊழியர்களிடம் காணிக்கையை வழங்கி உண்டியலில் சேர்க்க சொல்வர் என திட்டமிட்டு கோயில் நிர்வாகம் இதை செயல்படுத்தி உள்ளது. தரிசனத்திற்கு தடை விதித்துவிட்டு காணிக்கை வசூலுக்கு முக்கியத்துவம் தரும் அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட பொது செயலாளர் ராமமூர்த்தி கூறும்போது, பக்தர்களின் உணர்வை, ஆன்மிகம் சார்ந்த விஷயத்தை அரசு வியாபாரமாக மாற்றியுள்ளது. நம்பிக்கையை கொச்சைப்படுத்துகிறது, என்றார்.