தஞ்சாவூர் பெரிய கோவிலில் நவராத்திரி விழா: கெஜலட்சுமி அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2021 11:10
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் நவராத்திரி விழாவில் நேற்று மூலவர் பெரியநாயகி அம்மன் கெஜலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். விழாவில் அம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் ஆறாம் நாளான நேற்று (அக்.,11) மூலவர் பெரியநாயகி அம்மன் கெஜலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.