உடன்குடி: குலசேகரன்பட்டணம் தசரா திருவிழாவில், முக்கிய நிகழ்வாக மகிஷாசூரன் உள்பிரகார வீதியுலா நடந்தது. குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, கடந்த அக். 6ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக, அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . ஆண்டு தோறும் 7ம்நாள் திருவிழாவில், மாலை 5:00 மணியளவில் ஆணவமாக ஊருக்குள் மகிஷா சூரன் வலம் வருவது வழக்கம். தற்போது எந்த வீதியுலாவும் ஊருக்குள் இல்லாமல், கோயில் பிராகார மண்டபங்களை சுற்றியே நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று (12 ம் தேதி) மாலை 5மணியளவில் மகிஷாசூரன் கோயில் பிரகாரங்களை சுற்றி ஆணவமாக வந்தார். திருவீதியுலாக்களில், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.