ரூ. 12 கோடியில் திருமலையில் புதிய பூந்தி மடப்பள்ளி திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2021 03:10
திருப்பதி: திருமலையில், 12 கோடி ரூபாய் செலவில் புதிய பூந்தி மடப்பள்ளியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.திருப்பதியில் நேற்று முன்தினம் நடந்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., - காங்., தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, பின் திருமலைக்கு சென்றார்.ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து கருட சேவையில் பங்கேற்ற அவர், நேற்று காலை ஏழுமலையானை தரிசித்தார். தன் எடைக்கு நிகராக, 78 கிலோ அரிசியை துலாபாரமாக அளித்து தன் வேண்டுதலை நிறைவேற்றினார்.பின், திருமலை ஏழுமலையான் கோவில் அருகில் புதிதாக கட்டப்பட்ட பூந்தி மடப்பள்ளியை திறந்து வைத்தார்.ஹிந்தி ஒளிபரப்புதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தொலைகாட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலின் கன்னட மற்றும் இந்தி மொழி ஒளிபரப்பு நேற்று காலை துவங்கப்பட்டது. இந்த ஒளிபரப்பை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்.