அயோத்தி ராமர் கோவில் கருவறையில் ராம நவமியில் சூரிய ஔி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2021 08:10
அயோத்தி: ஆண்டு தோறும் ராம நவமி அன்று கருவறைக்குள் சூரிய ஒளி விழும் வகையில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட உள்ளதாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்து உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் துவங்கி வேகமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே ஆண்டு தோறும் ராம நவமியின்போது கோவில் கருவறைக்குள் சூரிய ஒளி விழும் வகையில் ராமர் கோவில் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் கூறியதாவது:ஒடிசாவில் உள்ள சூரிய கோவிலுக்குள் சூரிய ஒளி விழுகிறது. இதை அடிப்படையாக வைத்து, ஆண்டு தோறும் ராம நவமியின்போது கருவறைக்குள் சூரிய ஒளி விழும் வகையில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்காக வானியல் வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவிலை 2023 டிசம்பருக்குள் திறக்கும் வகையில் பணிகள் விரைவாக நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.