ராமர் கோவில் கட்டுமான பணிக்கு ஆப்கன் சிறுமி அனுப்பிய நதி நீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2021 11:11
அயோத்தி:அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த, ஆப்கானிஸ்தான் சிறுமியால் அனுப்பிவைக்கப்பட்ட காபூல் நதி நீரை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று வழங்கினார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் கட்டுமானத்திற்காக இந்திய மக்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரும் நன்கொடை அளித்து வருகின்றனர். உலகம் முழுதும் உள்ள நதிகளில் இருந்து நீரை சேகரித்து, அதையும் பலர் அனுப்பி வருகின்றனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூலை சேர்ந்த சிறுமி ஒருவர், அங்குள்ள நதியில் இருந்து நீரை சேகரித்து, நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமீபத்தில் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் கோவில் கட்டுமான பணிகள் நடக்கும் பகுதிக்கு நேரில் வந்து, அந்த சிறுமி அனுப்பி வைத்த நதி நீரை முதல்வர் ஆதித்யநாத் வழங்கினார். அதனுடன், தான் எடுத்துவந்த கங்கை நீரையும் வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், மதம் மீது மிகுந்த பற்று வைத்துள்ள ஆப்கன் சிறுமியை பாராட்டினார்.