பதிவு செய்த நாள்
01
நவ
2021
01:11
திருப்பூர்: சிவன்மலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. கோவில் உதவி கமிஷனர் முல்லை அறிக்கை : சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் தொற்று பரவல் காரணமாக, கடந்த, இரண்டு ஆண்டுகளாக, அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தாண்டு தளர்வுகளுடனான சில கட்டுப்பாடுகள் தொடர்கிறது. வரும் 5ம் தேதி முதல், 11ம் தேதி வரை கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது. நிகழ்வுகள் அனை த்தும் கோவில் மலை மீது நடக்கும். அரசின் வழிகாட்டுதல்படி, வரும் 4 முதல், 8ம் தே தி வரை , பக்தர்கள், கட்டளைதாரர்களுக்கு விழாவில் பங்கேற்க அனுமதி உண்டு. முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் (9ம்தேதி), திருக்கல்யாணம் (நவ., 10ம் தே தி) ஆகிய நாட்களில் பக்தர்கள், கட்டளைதாரர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.