காரைக்கால் : திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.காரைக்கால் திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். .தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை மற்றும் நேற்று சனிக்கிழமை என்பதால், அதிகாலை முதல் ஆயிரக்காணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு குவிந்தனர்.நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என இரண்டு வகை தரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.கொரோனா கட்டுப்பாடு காரணமாக நளன் குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை. சனீஸ்வர பகவானை தரிசனம் செய்த பக்தர்கள், எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.