பதிவு செய்த நாள்
07
நவ
2021
03:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டியையொட்டி தினமும் காலை, மாலை யாகசாலை பூஜை நடக்கிறது.இவ்விழாவில் நவ., 4 முதல் விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்குடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி சொம்புகளில் புனிதநீர் நிரப்பி வைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனை நடக்கிறது. நவ., 10 காலையில் சண்முகருக்கு தங்க குடத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும்.பச்சை அலங்காரம்கந்தசஷ்டி 3ம் நாளான நேற்று சண்முகார்ச்சனை முடிந்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பச்சை பட்டுக்கள், மரிக்கொழுந்து மாலைகள், நகைகள் அணிவிக்கப்பட்டு அருள் பாலித்தனர்.