திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் ஸ்தல விருட்சமாக மரசம்பங்கி அறிவிக்கப் பட்டு உள்ளது.
திருமலை ஏழுமலையானின் கைங்கரியத்தில் முக்கிய பங்கு வகிப்பது மரசம்பங்கி மலர். இன்றும், ஏழுமலையான் கோயிலுக்குள் நடிமி படிகாவலி மற்றும் மகாதுவாரத்திற்கு இடையில் உள்ள, 30 அடி பிரகாரம், சம்பங்கி பிரகாரம் என அழைக்கப்படுகிறது.இத்தனை மகத்துவங்கள் மற்றும் தொடர்புகள் மரசம்பங்கி மலருக்கும் ஏழுமலையானுக்கும் இருப்பதால், தேவஸ்தான நிர்வாகம், மரசம்பங்கி மலரை திருமலையின் ஸ்தல விருட்சமாக அறிவித்துள்ளது.