பதிவு செய்த நாள்
02
ஜூலை
2012
11:07
ஆழ்வார்குறிச்சி: கல்யாணிபுரம் செல்வவிநாயகர் மற்றும் வடக்குவாச்செல்வி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கல்யாணிபுரம் மேலத்தெருவில் செல்வவிநாயகர் மற்றும் வடக்குவாச்செல்வி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, லெட்சுமி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.கும்பாபிஷேக நாளான நேற்று காலை 8 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி ஆகிய வைபவங்கள் நடந்தது. காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் இளையான்குடி மணிகண்டன் குருக்கள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை நடத்தினார். பின்னர் மகா அபிஷேகம், அன்னதானம் ஆகியன நடந்தது.ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.