பதிவு செய்த நாள்
30
நவ
2021
12:11
தேவதானப்பட்டி : சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு108 சங்காபிஷேகம் நடந்தது. காசிவிஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மனுக்கு மஞ்சள்பொடி, மாபொடி, திருமஞ்சன திரவிம், பால், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி சந்தனம் பொருட்களால் சங்காபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர், முருகன், அதிகாரநந்தி, தட்சிணாமூர்த்தி, நால்வர், லிங்கோத்பவர், துர்க்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை சில்வார்பட்டி சிவனடியார்கள் செய்திருந்தனர்.* பெரியகுளம் கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகமும், பெரியகுளம் வரசித்தி விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.