Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ... பெருமாள் கோவில் தெப்பத்திற்கு நீர்வழிப்பாதை கண்டறியப்படுமா பெருமாள் கோவில் தெப்பத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகரிக்கும் எலித்தொல்லை
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகரிக்கும் எலித்தொல்லை

பதிவு செய்த நாள்

03 டிச
2021
10:12

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எலித்தொல்லை அதிகரித்ததால் மின்ஒயர் துண்டிப்பு, தீ விபத்து போன்ற பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

இக்கோயிலில் அனைத்து பகுதிகளிலும் எலிகள் ஊடுருவியுள்ளன. நேற்றுமுன்தினம் அம்மன் மூலஸ்தானம் முன்புள்ள அர்த்த மண்டபத்தில் விளக்கின் நெய் திரியை உண்பதற்காக எலி எடுத்து வந்ததில் தரை மேட் தீப்பிடித்து புகைந்தது. நல்லவேளையாக பெரிய பாதிப்பு இல்லை. மூலஸ்தானத்தில் அம்மன், சுவாமிக்கு அபிேஷகம் செய்யும் நீர் செல்ல துவாரம் உள்ளது. அதன் வழியே, நடை சாத்தப்படும் சமயங்களில் எலிகள் ஊடுருவுகின்றன. குளிரூட்டும் இயந்திர கருவிகள் உட்பட பல இடங்களில் தங்கி குடும்பம் நடத்துகின்றன. எலிகளை ஒழிக்க முயற்சித்தால் கோயிலுக்குள் அது எங்கேயாவது இறந்து, துர்நாற்றம் வீசுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் குளிரூட்டும் இயந்திரத்தில் எலி ஒன்று இறந்து துர்நாற்றம் வீசி பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. இதனால் எலி ஒழிப்பில் தயக்கம் நிலவுகிறது.2018 பிப்.,ல் வீரவசந்தராய மண்டபத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்திற்கு எலிதான் காரணம் என அப்போது கூறப்பட்டது. எலிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே கோயிலுக்குள் மின் ஒயர் துண்டிப்பு, தீ விபத்து போன்று அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்கும்.

ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தல்: நேற்றுமுன்தினம் நடந்த லேசான தீ விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் கூறுகையில், கருவறை முன் நடந்த தீ விபத்து மனவலியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் பணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் பொறுப்புணர்வு வேண்டும். தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இதுபோன்று சம்பவம் இனி நடக்காமல் இருக்க கோயில் தொடர்பு உடைய அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar