கடலுார், கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பிரதோஷத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது.கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் அம்பாள் மற்றும் நந்தி பகவானுக்கு நேற்று மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலைகள் சாற்றி, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 4:30 மணிக்குமேல், நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு 12 சிறப்பு அபிேஷகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். பூஜைகளை குமார்,ஹரிபிரபு குருக்கள் செய்தனர். உற்சவர் புவனாம்பிகை சமேதராய் பூலோகநாதர் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.