பெரம்பலூர்: பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை சோமாவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்திருக்கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வானர அரசரான வாலி இத்தலத்தில் உள்ள ஈஸ்வரரை பூஜித்து சென்றதால் இவ்வூர் வாலிகண்டபுரம் என்ற சிறப்பு பெயரோடு அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கார்த்திகை கடைசி சோமாவார திங்கட்கிழமையொட்டி 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது. கணபதி ஹோமத்தோடு யாகவேள்வியும் அதனையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 1008 சங்குகளில் நிரப்பபட்ட புனித நீர் மூலவரான வாலீஸ்வரருக்கு ஊற்றப்பட்டு சிறப்பு பூஜையும், அதனையடுத்து மலர் அலங்கார செய்யப்பட்டு மஹா தீபாரதனையும் நடைபெற்றது. 1008 சங்காபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர். மற்றும் குறைந்த அளவில் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோயில் குருக்கள் செல்லப்பா.குமார். சண்முகம்.ராஜா.ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.