பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் முகூர்த்தக்கால் நடுவிழா நடைபெற்றது. சேலத்தில் பிரஸித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கோட்டை மாரியம்மன் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, இன்று முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடைபெற்றது. 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் முகூர்த்தக்கால் நடுதலும், அம்மனுக்கு மஹா தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தங்க கவசத்தில் கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 24ம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 31ம் தேதி கம்பம் நடுதலும், ஆக., 7ம் தேதி சக்திகரகம் அழைத்தல், ஆக., 8ம் தேதி பொங்கல் விழாவும், உருள தண்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஆக., 12ம் தேதி சத்தாபரணம் மற்றும் ஆக., 14ம் தேதி பால்குட ஊர்வலத்துடன் விழா நிகழ்ச்சி முடிவடைகிறது.