பதிவு செய்த நாள்
22
டிச
2021
05:12
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று, 1,008 சங்காபிஷேகம் நேற்று விமர்சையாக நடந்தது.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், நாயன்மார்களால் பாடல் பெற்ற மிகப்பழமையான தலம். சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் துவங்கியதில் இருந்து, முதல் நான்கு சோமவாரத்தில், 108 வலம்புரி சங்காபிஷகமும், ஐந்தாவது சோமவாரத்தில், 1008 வலம்புரி சங்காபிஷேகமும் நடத்தப்படுகிறது.அதன்படி, மார்கழி பிறந்தாலும், கார்த்திகை மாதம் பிறந்து ஐந்தாவது சோமவாரமான நேற்று, 1,008 சங்காபிஷேகம் விமர்சையாக நடந்தது.நேற்று காலை 8:30 மணிக்கு விக்னேஷ்வர அனுக்ஞை நடந்தது. அதை தொடர்ந்து, யாகசாலை வளர்க்கப்பட்டது. பின், மகாபூர்ணாஹுதியும், மகா தீபாராதனையும் நடந்தது. பின், கலசபுறப்பாடு நடந்தது.மதியம், கபாலீஸ்வருக்கு, 1008 வலம்புரி சங்குகளில் மந்திர உரு செய்யப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் நடத்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைக்கமிஷனர் காவேரி செய்திருந்தார்.