பதிவு செய்த நாள்
05
ஜன
2022
04:01
அவிநாசி: அவிநாசி, ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிவில் 7வது ஆண்டு விழா நடந்தது. காலை, 7:00 மணிக்கு, ஸ்ரீ மகா கணபதி ஹோமம். ,ஸ்ரீ சாஸ்தா ஜேஹாமம், அஷ்ட கிரவிய அபிஷேகம், மகா சாஸ்தா ேஹாமம், அஷ்ட திரவிய அபிஷேகம், மகா தீபாராதனை, கூட்டு பஜனை நடந்தது. பகல், 11:00 மணிக்கு, தர்ம சாஸ்தாவிற்கு அன்னாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின், ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில் வளாகத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, அவிநாசி நகர ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.