திருநள்ளாறு சனிபகவானை தரிசனம் செய்ய தடுப்பூசி சான்றிதழ் அவசியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2022 10:01
திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் அவசியம் என்று கலெக்டர் அர்ஜுன் சர்மா அறிவுறுத்தல்.
காரைக்கால்: திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் அவசியம் என்று கலெக்டர் அர்ஜுன் சர்மா கூறினார்.
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட மக்கள் முழு ஒத்துழைக்க வேண்டும். மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கட்டாயமாக முகத்தில் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும். பொது இடத்தில் அதிகம் கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும். திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். கோயில் ஊழியர்கள் அனைவரும் தடுப்புசி போடுவது கட்டாயம். அரசு மருத்துவமனை போதிய இருக்கைகள். தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. வேளாண் கல்லூரியில் தோற்றுப் பாதிக்கப்பட்ட அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பின்னர் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படும் என்று கூறினார்.