Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: தை ராசி பலன் விருச்சிகம்: தை ராசி பலன் விருச்சிகம்: தை ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
துலாம்: தை ராசி பலன்
எழுத்தின் அளவு:
துலாம்: தை ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 ஜன
2022
12:01

சித்திரை 3, 4: காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும் சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொண்ட சித்திரை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும். சூரியனால் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரிய ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் : பிப். 9
அதிர்ஷ்ட நாள் : ஜன. 29

ஸ்வாதி: நியாயத்தின் பக்கம் நிற்கும் ஸ்வாதி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல் துறையினருக்கு இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். கலைத்துறையினருக்கு கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: துர்க்கையை வழிபடுவது கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
சந்திராஷ்டமம் : ஜன. 14, பிப். 10
அதிர்ஷ்ட நாள் : பிப். 1. 2

விசாகம் - 1, 2, 3: தனித்தன்மையுடன் விளங்கும் விசாக நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். கிரக சேர்க்கைகள் எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற் கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்து வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

பரிகாரம்: பழனி முருகனை வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் : ஜன. 14, 15, பிப். 11
அதிர்ஷ்ட நாள் : பிப். 1, 2

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar