மார்கழி மாதம் முழுவதும் திருமால் கோயில்களில் ஆண்டாளின் திருப்பாவை பாடப்படும். முதல் நாளில் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்னும் பாசுரத்தில் தொடங்கி, ஆரம்பித்து தினமும் ஒரு பாட்டு வீதம் பாடுவர். இதற்கு ‘நாள் பாட்டு’ என்று பெயர். இதன் காரணமாக அந்த காலத்தில் மார்கழியில் எழுதும் கடிதங்களில் தேதியை குறிப்பிடாமல் அந்தந்த நாளுக்குரிய பாசுரத்தின் முதல் வார்த்தையை எழுதும் மரபு ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீரங்கம் போன்ற திவ்யதேச பகுதிகளில் இருந்தது. உதாரணமாக ‘மாயனை’ என்றால் மார்கழி ஐந்தாம் தேதி, வங்கக்கடல் என்றால் மார்கழி 30ம்தேதி என்பது பொருள்.