பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2022 12:02
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று தைமாதம் 4வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெருந்தேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி காலை 9:00 மணிக்கு மூலவர் வரதராஜபெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருந்தேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.