திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஏழாம் நாள் நிகழ்ச்சியாக சிவகாமி அம்பாளுக்கு நடராஜர் ஏடு கொடுக்கும் விழா நடந்தது. காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனியாக புறப்பாடாகி கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர். தீபாராதனை முடிந்து நடராஜர் கரத்திலிருந்த ஏடுகளை சிவாச்சாரியார் பெற்று சிவகாமி அம்பாள் கரத்தில் சேர்ப்பித்தார்.