உத்திராடம் 2, 3, 4 பாதம்: பொறுப்பாக பணியாற்றி உரிய பலன் பெறுவீர்கள். வீண் செலவுகள் குறையும். பிள்ளைகளின் வழியில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் அலைச்சல் உருவாகும். உங்கள் பேச்சும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும். அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். சிலருக்கு சம்பள உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தினர் அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள். நண்பர், உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு கூடும். இளமை கால நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி தரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வங்கி நிதியுதவியுடன் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவர்.வாடிக்கையாளர்கள் ஆதரவைக் கண்டு மனம் மகிழ்வர். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வர். கலைத்துறையினர் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவர். தொழில் ரீதியான பயணம் வெற்றி பெறும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் நலனுக்காக பணம் செலவழிக்க நேரிடும். தலைமையின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். மாணவர்கள் எதிர்கால நலன் கருதி அக்கறையுடன் படிப்பர். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சந்திராஷ்டமம்: பிப்.16, 17 அதிர்ஷ்ட நாள்: பிப். 25 பரிகாரம் : சனிக் கிழமைகளில் சாஸ்தாவை வழிபடுங்கள்.
திருவோணம்: எதிலும் வேகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். நீங்கள் சூழ்நிலைக் கேற்றவாறு செயல்படுவதில் வல்லவர். இந்த மாதம் பணவரவு கூடும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சமூகத்தில் அனைவரிடமும் நட்புடன் பழகி அன்பை பெறுவீர்கள். குடும்ப வாழ்வில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக வலிய கூடுதல் பொறுப்பை ஏற்காமல் இருப்பது நல்லது. சிலர் நண்பர்களால் வீண் அலைச்சல், செலவுக்கு ஆளாக நேரிடலாம். அந்தஸ்து மிக்கவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரவழியில் இருந்த பிரச்னைகள் மறையும். மனைவியின் உடல்நலனில் கவனம் தேவை. பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். பெண்கள் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பர். சக தோழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சி தரும். கலைத்துறையினர் தொழில்ரீதியாக பயணம் மேற்கொள்வர். அரசியல்வாதிகள் மன சோர்வுக்கு ஆளாவர். மாணவர்கள் பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்துவர். அலைபேசியில் பொழுதை கழிக்காமல் படிக்கும் நேரத்தை அதிகப் படுத்துங்கள். பெற்றோரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். சந்திராஷ்டமம்: பிப். 17,18 அதிர்ஷ்ட நாள்: பிப். 26
பரிகாரம் : பிரத்தியங்கராவை வணங்க எதிர்ப்பு அகலும்.
அவிட்டம் 1, 2 பாதம் அதிகாரமிக்க மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். தேவையான விஷயங்களை அவர்களின் மூலம் சாதித்துக் கொள்ள முயல்வீர்கள். மனதில் இருந்த டென்ஷன் குறையும். ஆரோக்கியம் உண்டாகும். மருத்துவ செலவு குறையும். விரும்பிய படி திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நீண்ட துாரத்தில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். உடலில் வலிமையும், மனதில் துணிச்சலும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். பணியாளர்கள் கடந்த காலத்தில் செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான உறவு நிலவும். பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். அக்கம்பக்கத்தினருடன் நட்புணர்வுடன் பழகுவர். கலைத்துறையினருக்கு தொழிலில் கவனம் தேவை. விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை காணப்படும். தொண்டர்களால் செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெற்றோர் மகிழும் விதத்தில் அக்கறையுடன் படிப்பர். சந்திராஷ்டமம்: பிப். 18,19 அதிர்ஷ்ட நாள்: பிப் 27 பரிகாரம்: நடராஜர் வழிபாடு நன்மை தரும்.
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »