உத்திராடம் - 2, 3, 4: தனது சாமர்த்தியத்தின் மூலமாக எந்த கடினமான விஷயங்களையும் எளிதாக முடிக்கும் உங்களுக்கு இந்த மாதம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். கடினமான காரியங்கள் கூட சுலபமாக முடிந்துவிடும். மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி தருவார். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். தேவையான பண உதவி கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான சுபச்செலவுகள் ஏற்படலாம். உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். அரசியல்துறையினருக்கு வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு: கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது. பரிகாரம்: கருட பகவானை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். சந்திராஷ்டம தினங்கள்: மே 09 அதிர்ஷ்ட தினங்கள்: ஏப் 30, மே 01
திருவோணம்: தனது உழைப்பின் மூலம் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் உங்களுக்கு இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விருப்பதிற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடை நீங்கும். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் நீங்கும். குடும்பம் பற்றிய கவலைகள் அகலும். உடல் ஆரோக்கியம் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். பெண்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும். கலைத்துறையினர் தங்கள் வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடினமான பணிகளையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் நெருக்கம் அதிகரிக்கும். மனவருத்தத்துடன் சென்ற நண்பர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. பரிகாரம்: வாராகி தேவியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும். சந்திராஷ்டம தினங்கள்: மே 10 அதிர்ஷ்ட தினங்கள்: ஏப் 30, மே 01
அவிட்டம் - 1, 2: வாழ்க்கையில் தனது பலத்தால் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய உங்களுக்கு இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகுந்த நன்மைகள் வந்து சேரும் காலகட்டம். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். கலைத்துறையினர் பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். வெற்றி வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். சந்திராஷ்டம தினங்கள்: ஏப் 14, மே 11 அதிர்ஷ்ட தினங்கள்: மே 01
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »