Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : தமிழ் புத்தாண்டு பலன் சிம்மம் : தமிழ் புத்தாண்டு பலன் சிம்மம் : தமிழ் புத்தாண்டு பலன்
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு பலன் (14.4.2022 முதல் 13.4.2023 வரை)
கடகம் : தமிழ் புத்தாண்டு பலன்
எழுத்தின் அளவு:
கடகம் : தமிழ் புத்தாண்டு பலன்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2022
23:14

புனர்பூசம் 4ம் பாதம் : எடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பதில் வல்லவர்களான உங்களுக்கு இந்த புத்தாண்டில் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குரு ராசியை பார்க்கிறார். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். அரசியல்துறையினருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
பரிகாரம்:  குருவிற்கு அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி இன்பம் உண்டாகும்.
.
பூசம்: தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்ட உங்களுக்கு இந்த புத்தாண்டில் மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீடு, மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். தொழில், வியாபாரம் சுமாராக  லாபம் இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். பெண்களுக்கு சுபச்செலவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும்.
.
ஆயில்யம்: இளகிய மனம் கொண்ட உங்களுக்கு இந்த புத்தாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். பணியின் நிமித்தமாக சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வழக்கு விவகாரங்கள் அனுகூலமாக இருக்கும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் தொல்லை தலைதுாக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அரசியல்துறையினருக்கு மனம் மகிழும்படியான சூழ்நிலை ஏற்படும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நல்லது.
பரிகாரம்: அனுமனை வணங்கி வர நன்மைகள் உண்டாகும்.

 
மேலும் தமிழ் புத்தாண்டு பலன் (14.4.2022 முதல் 13.4.2023 வரை) »
temple news
அசுவினி: பண்புடனும், அன்புடனும் பழகும் நீங்கள் இந்த புத்தாண்டில் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 பாதம் எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமாளித்து காரிய வெற்றி காணும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 பாதம் " தங்கள் தோரணையில் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் வல்லமை உடைய உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: நிதானமாக செயல்பட்டு படிப்படியாக முன்னேறும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் தைரியம் அதிகரிக்கும். ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3,4 பாதம்: வாழ்க்கையில் சோதனைகளையும் சாதனைகளாக மாற்றும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் காரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar