Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : தமிழ் புத்தாண்டு பலன் கன்னி : தமிழ் புத்தாண்டு பலன் கன்னி : தமிழ் புத்தாண்டு பலன்
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை)
சிம்மம் : தமிழ் புத்தாண்டு பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம் : தமிழ் புத்தாண்டு பலன்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2022
11:04

மகம்: நிதானமாக செயல்பட்டு படிப்படியாக முன்னேறும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் தைரியம் அதிகரிக்கும். ஜீரண கோளாறுகள் அகலும். பணம் பலவழிகளிலும் வரும். காரியதாமதம் நீங்கும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப்பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.  குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவைப் பெற்று மனம் மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. நண்பர்களுடன் வீண் அலைச்சல் இருக்கும்.
பரிகாரம்: பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வர கடன் தொல்லை  பறந்தோடும்.

பூரம்: எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட துாரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். வாக்கு வன்மை ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். கலைத்துறையினர் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சில திட்டங்களைத் தீட்டுவர்.  அரசியல்துறையினருக்கு உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: தினமும் பஞ்சமுக தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

உத்திரம் 1ம் பாதம்:  எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக முடிக்கும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய் வரலாம். பண பற்றாக்குறை நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கணவன், மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். சிலர் குடும்பச் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடுவர். கலைத்துறையினருக்கு செயல்திறன் வெளிப்படும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சக கலைஞர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அரசியல்துறையினருக்கு பொருளாதார நிலை உயரும். முயற்சிகள் கை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில் திறமை பல வழிகளில் வெளிப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மைதரும்.
பரிகாரம்: காமாட்சி அம்மனை வணங்க எல்லாம் நன்மையாக முடியும். .

பகிர்க copied
 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: யோக காலம்தைரிய காரகனான செவ்வாய், ஞானகாரகனாக கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை: நல்ல காலம் வந்தாச்சுஆத்மக்காரகன் சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம்: உழைப்பால் முன்னேறுவீர்கள்தைரிய, வீரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாயின் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம்: உழைப்பால் உயர்வுபொன் பொருள் புகழுக்கு காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar