Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கும்பம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் கும்பம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2021 முதல் 13.4. 2022 வரை)
மீனம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
23:09

பூரட்டாதி, 4 ம் பாதம்: நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்


பொதுவாக இவ்வருடம் உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது. முக்கியமான பணிகளில் சரியான துணையுடன் இணைந்து செயல்படுவதால் ஒத்துழைப்பு அதிகரிக்கும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படுவீர்கள். இது உங்கள் வெற்றியை உறுதி செய்கிறது. இது உங்களுக்கு உயர்வு தரும் வருடமாக அமைந்துள்ளது.


நிதி: உங்களின் நிதி நிலைமையைப் பார்க்கும்போது மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.  வழக்கமான வருமானத்தைவிட இந்த ஆண்டு சில சமயங்களில் ஓரிரு கூடுதல் வருமானங்களும் இருக்கும். சிலர் வேறு பணிக்கு மாறுவதன் மூலம் சம்பளம் கூடப் பெறுவீர்கள்.


குடும்பம்: குடும்பம் தொடர்பாக நீங்கள் நினைக்கும் விஷயங்களை எளிதில் நடத்தி முடிக்கும் சாதகமான நிலை உள்ளது. தைரியமும், தன்னம்பிக்கையும் உங்கள் செயல்களில் வெற்றியினைப் பெற்றுத் தரும். குடியிருக்கும் வீட்டினில் மாறுதல் செய்ய முற்படுவீர்கள்.


கல்வி: சென்ற ஆண்டு விரும்பிய கல்வி கிடைக்காமல் சற்று ஏமாற்றமடைந்திருநதவர்கள் அதே துறையில் முயன்று அருமையான வெற்றி பெறுவீர்கள். அநாயாச முயற்சியிலேயே வெற்றி பெறும் அளவுக்கு மனம் குவிந்து, கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.


பெண்கள்: தாய்வழி உறவினர்களால் புதிய நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவருடன் இணைந்து ‘குடும்ப சலசலப்புகளைக் களைவீர்கள். அண்டை அயலார் மத்தியில் பெருமிதம் உயரும்.


உடல் நிலை: ஆரோக்யம் பற்றிய விழிப்புணர்வுடன் கவனமாக உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை மேற்கொள்பவருக்கு எந்தவிதமான தொல்லையும் அண்டாது. மிகச் சிறிய அளவில் ஏற்படும் சிரமங்கள் உடனக்குடன் தீரும்.


தொழில்/பணி: சிறுதொழில் செய்வோர் அதிக உழைப்பினை வெளிப்படுத்தி குறைந்த லாபத்தினைக் கண்டு வருவார்கள். உயர்பதவியில் உள்ளோர் பணியாட்களுக்காகக் காத்திராமல் தாங்களே சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் நல்ல லாபம் அடைவார்கள். உழைப்புக்கு மிஞ்சிய ஊதியமும் போனஸும் கிடைத்து மகிழ்வீர்கள்.


பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் வளம் பெருகும்

உத்திரட்டாதி: உழைப்பினால் ஊதியம் பெருகும்.

பொதுவாக,  செயல்களில் நிதானமும் பக்குவமும் கூடியிருக்கும். சுய உழைப்பினால் உயர்வினைக் காண இயலும். அதிர்ஷ்டம் ஓரிரு முறை துணை செய்து வியக்க வைக்கும். இவ்வருடத்தினை சந்தோஷமாகக் கடப்பீர்கள். சிலர் புதிய வீடு அல்லது ஃப்ளாட் வாங்குவீர்கள். வெளி மனிதர்களால் ஏற்பட்டிருந்த மன உளைச்சல் நீங்கி வீட்டில் மகிழ்ச்சி வரும்.


நிதி: சென்ற சில வருடங்களைவிட நிறைய வருமானமும் நல்ல சேமிப்பும் பெருகும். புதிய வழிகளில் முதலீடு செய்யும் ஆலோசனைகள் கிடைக்கும். வரிகளைச் சரியாகக் கட்டுவது நல்லது. உழைப்பினால் ஊதியம் பெருகும். சரியான வகையில் ஆலோசனைகள் கிடைக்கும்.


குடும்பம்: பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பினைக் காண்பீர்கள். அண்டை வீட்டாருடன் அனுசரித்துச் செல்வதன் மூலம் உயர்வு ஏற்பட்டு மகிழ்வீர்கள். சொந்த ஊரை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இவ்வருடத்தில் தங்கள் தாய்மண்ணைச் சென்றடைவார்கள்.


கல்வி: நன்கு உழைப்பதற்கு உந்து சக்திகள் கிடைக்கும்.  பெரியவர்களின் ஆசியும் ஆசிரியர்களின் உதவியும் கிடைக்கும். பணம் கட்டுவதற்கு ஸ்காலர்ஷிப்/ லோன் கிடைக்கும். வெளியூரில் தங்கிப் படிக்க வேண்டியிருககலாம். மேல்படிப்பில் விரும்பிய சீட் கிடைக்கும்.

பெண்கள்: மனதில் மகிழ்ச்சி நிறையும். சிறு பயணங்கள் மூலம் மனதுக்குப் பிடித்தவர்களை நெருங்குவீர்கள். திருமணமான பெண்களுக்குக் கணவர் வீட்டு மனிதர்களின் ஆதரவுடன் அலுவல முன்னேற்றம் சாத்தியமாகும்.


உடல் நிலை: நல்ல பழக்கங்கள் இருப்பவர்களுக்கு அற்புதமான ஆரோக்யம் நிலவும். அல்லாதவர்கள் மாற்றிக்கொள்ள முயற்சி செய்வது நல்லது. பெரிய அளவில் வைத்தியம் தேவைப்படாமல்     சுலபமாக குணமடைவீர்கள். 


தொழில்/பணி: உணவுப் பொருட்கள் வியாபாரம், குளிர்பான விற்பனை, தோல்பொருட்கள் ஏற்றுமதி, செல்போன், சிம்கார்டு விற்பனை ஆகிய தொழில்களை செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி அலுவலகத்தில் உங்களுக்குரிய அங்கீகாரத்தினைப் பெறுவீர்கள்.


பரிகாரம்: திருமாலின் துதிகளை புதன் கிழமை சொல்லி வர, துன்பங்கள் விலகும்.

ரேவதி: மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும்.

ஆன்மிக ஈடுபாடுகள்,  பொது நல சேவை ஆகியவை மனதில் குடிபுகும். பெரியவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்து மனநிம்மதி காண்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்கள் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உழைப்பு அதிகமாகும்.


நிதி: எடுக்க எடுக்க வளரும்படியாக நிதி வசதி கூடும். அதை முறையாகவும் கவனமாகவும் முதலீடு செய்தால் எதிர்காலம் சிறக்கும்.  நீங்கள் உழைப்புக்கு எதிர்பார்க்கும் பலனைவிட அதிக ஊதியம் கிடைத்து மகிழ்விக்கும். முதலீட்டைப் பல வகைகளில் பிரித்து வளம் காண்பீர்கள்.


குடும்பம்: பல காலம் கழித்து வந்து இணையும் உறவினரால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாட்டில் உள்ள குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். வீடு மாறுவதன் மூலம் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு காரணமாக நன்மையும் மகிழ்ச்சியும் வரும்.


கல்வி: இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்று உண்டு. உங்கள் சாதனைகள்மூலம் பெற்றோருக்கு நிம்மதியும் சந்தோஷமும் வரும். வருடக் கடைசியில் மேடை ஏறிப்பரிசுகள் வாங்க வாய்ப்புள்ளது. மேல்படிப்பு மற்றும் ஆராய்ச்‘சிப்படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.
பெண்கள்: அலைச்சல், மன உளைச்சல், ஏமாற்றம் போன்றவை விலகும். படிப்படியாக அதிர்ஷ்டம் கூடி வரும்.  குடும்ப விசேஷம் காரணமாக எல்லோரும் மகிழ்ச்சியாகக் கூடி மகிழ்வீர்கள். தொழில் சிறக்கும்.

உடல் நிலை: கடந்த ஆண்டு எதிர்பாராத சில சிரமங்கள் ஏற்பட்டிருந்தாலும் பயந்த அளவு பிரச்னைகள் வந்திருக்காது. இந்த ஆண்டு அதைவிடச் சிறப்பான ஆரோக்யம் நிலவும். உணவுப் பழக்கங்களில் மாறுதல் செய்து நன்மையடைவீர்கள். 


தொழில்/பணி: சாதகமான மாற்றங்கள் வரும். இடையில் வேலையில்லாமல் திண்டாடியவர்கள் நல்ல வேலையில் சேருவீர்கள். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வரும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பெரிய தொகை கைக்கு வரும். புதிய துறை ஒன்றில் கூடுதலாக ஈடுபட வேண்டியிருக்கும். எந்த உழைப்பும் ஏமாற்றாது.


பரிகாரம்: குருவாயூரப்பனின் துதிகளைச் சொன்னால் மிகுந்த நன்மையடைவீர்கள்.

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2021 முதல் 13.4. 2022 வரை) »
temple
அசுவினி : வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொதுவாக குருபார்வை முக்கிய இடங்களுக்கு இருப்பதால் விவேகமாக ... மேலும்
 
temple
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: நிறையப் பண வரவு இருக்கும். குருபகவான் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple
மிருகசீரிடம், 3,4 ம் பாதம்: இனிமையான அனுபவங்களைப் பெறுவீர்கள் பொதுவாக வெளிநாட்டு தொடர்புடைய நன்மைகள் ... மேலும்
 
temple
புனர்பூசம்,4 ம் பாதம்: நிதி நிலைமை அமோகமாக இருக்கும்பொதுவாக பல பாக்கியங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக ... மேலும்
 
temple
மகம்: இயல்பை விடச் சிறப்பாக இருக்கும்.பொதுவாக இந்த  புத்தாண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாக இருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.