கொடைக்கானல்: கொடைக்கானல் சத்ய சாய் சுருதியில் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் தெய்வீக அணை ஈஸ்வரம்மா தின பொன்விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நாராயண சேவை என்னும் அன்னதானம், வஸ்திரதானம் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஸ்ரீ சத்யசாயி பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் இசைநிகழ்ச்சி நடந்தது. டி.வி.எஸ். குழும்பத் தலைவர் வேணு சீனிவாசன், டபே நிறுவன தலைவர் மல்லிகா சீனிவாசன், தொழிலதிபர் வாத்வாணி, சத்ய சாய் சேவா நிறுவனங்களின் மாநில தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் விஜயகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் வேலுமணி மற்றும் ஸ்ரீ சத்ய சாய் நிறுவனங்களின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.